டிராக்வியூ மூலம் 100 பெண்களை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது

ekuruvi-aiya8-X3

dineshkumar-0208டிராக்வியூ செயலி மூலம் 80 பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதை லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த ராமநாதபுரம் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கணினி பொறியாளராக உள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தனது உறவுக்கார பெண் ஒருவரது வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ்குமார்.

அப்போது அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொடுத்த செல்போனை தினேஷிடம் கொடுத்து அதில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அந்த ஸ்மார்ட் போனில் டிராக்வியூ என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார் தினேஷ். அதுமட்டுமல்லாமல் டிராக்வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தும்படியும் செய்துள்ளார்.

அந்த போனில் இருந்து வெளிநாட்டில் உள்ள கணவருடன் அந்தரங்கமாக பேசும் அத்தனை விஷயங்களையும் டிராக்வியூ மூலம் லேப்டாப்பில் பதிவு செய்துவிட்டார். பின்னர் அந்த பெண் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துக் கொண்டுள்ளார்.

இதைவைத்து கொண்டு உறவுக்கார பெண் என்றும் பாராமல் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை கூறி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். இல்லாவிட்டால் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் பதிவு செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஒரு வாரமாக செய்வது அறியாமல் திகைத்து வந்தார். இதையடுத்து அந்த விவகாரத்தை தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தினேஷே்குமாரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார் அந்த பெண்.

இதை நம்பி குறிப்பிட்ட இடத்துக்கு வந்தார் தினேஷ்குமார். ஆனால் இவர் வருகைக்கு முன்னதாகவே அந்த பெண்ணும், சகோதரனும் வந்திருந்தனர். அப்போது தினேஷ்குமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தினேஷுக்கு அந்த பெண் அக்காள் முறை வருமாம்.

இதையடுத்து உடனடியாக தினேஷ்குமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அவரிடமிருந்து 2 மடிக்கணினிகள், 3 செல்போன்கள், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அணியும் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர்.

Share This Post

Post Comment