விரைவில் வெளியாகும் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2

ekuruvi-aiya8-X3

Xiaomi-Mi-MIX-2-launch-confirmed-by-CEO-Lei-Junசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜுன் தெரிவித்துள்ளார்.

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான எம்.ஐ. மிக்ஸ் 2 வெளியீடு தேதி சார்ந்த தகவல்கள் வெயிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான எம்.ஐ. மிக்ஸ் 2 இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் தெரிவித்துள்ளார்.

வெய்போ பதிவில், எம்.ஐ. மிக்ஸ் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எம்.ஐ. மிக்ஸ் 2 உருவாக்கப்பட்டு வருவதை லெய் ஜுன் உறுதி செய்திருந்தார். முந்தைய எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதனால் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:
* 6.4 இன்ச் AMOLED, 2540×1440 பிக்சல் டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 19 எம்பி பிரைமரி கேமரா
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 4500 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 1080×2040 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4400 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் ஆண்டராய்டு 6.0 இயங்குதளம் வழங்கப்பட்டது.

Share This Post

Post Comment