சியோமி Mi மிக்ஸ் 2எஸ் அறிமுகம்

ekuruvi-aiya8-X3

Xiaomi-Mi-Mixசியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மும்மடங்கு வரை அதிவேகமாக செயல்படுத்தும் என சியோமி அறிவித்துள்ளது.
அழகிய புகைப்படங்களை எடுக்க டூயல் பிக்சல் செயற்கை நுண்ணறிவு 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய டூயல் கேமரா செட்டப் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. டி எக்ஸோ மார்க் Mi மிக்ஸ் 2 எஸ் ஸ்மார்ட்போன் கேமராவிற்கு 101 புள்ளிகளை வழங்கியுள்ளது.
சியோமி Mi மிக்ஸ் 2எஸ் சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– 7-சீரிஸ் வளைந்த அலுமினியம் ஃபிரேம்
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி, 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி டூயல் பிக்சல் செயற்கை நுண்ணறிவு பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட்
– ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3300 எம்ஏஹெச் பேட்டரி, கியூ.சி. 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
– 7.5W Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
சியோமி Mi மிக்ஸ் 2 எஸ் ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம் மாடலின் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,170), 128 ஜிபி மாடல் 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரேம் மாடல் 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,420) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய Mi மிக்ஸ் 2 எஸ்  ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. சியோமி வயர்லெஸ் சார்ஜர் 99 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,025) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்க வேண்டும். இதற்கான முன்பதிவு இன்று துவங்கி, விற்பனை ஏப்ரல் 3-ம் தேதி முதல் துவங்குகிறது.

Share This Post

Post Comment