தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது மட்டக்களப்பு பா.உ. யோகேஸ்வரன் (காணொளிகள்)
Jul 02 2012 14:06:58

தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடபட்டு வருகின்றது. சைவ வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு பௌத்த வழிபாட்டு தலங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. யுத்தத்தின் பின்னராவது அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை அரசு முன்வை க்குமென எதிர்பார்த்தோம். ஆனால் அரசு எம்மை மாத்திரமல்ல சர்வதேசத்தையுமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

நேற்று ஞாயிறு மாலை ஸ்காபுறோ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க கனடாக் கிளையின் சர்வதேச விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.திரு.சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு கூறினார்

வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வுக்காகவே நாம் போராடி வருகின்றோம். கனடாவில் புலம் பெயர் ந்த தமிழர்கள் அனுபவித்து வரும் உரிமையை சொந்த நாட்டிலுள்ள தமிழர்கள் அனுபவிக்க முடியவில்லை. மீளக் குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகளோ, உதவிகளோ வழங்கப் படவில்லை. இராணுவ உயரதிகாரிகளே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் நான்காவது மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரி க்கப் படுகின்றனர்.

இலங்கை தமிழ் மக்களின் பூர்வீக நாடு என பௌத்த நூலான மகாவம்சமே கூறியுள்ளது. புத்தர் இரண்டாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்த போது யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்ததாகவும், புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது விஜயன் இலங்கைக்கு வந்தான் எனவும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நிலைமை மோசமாகி விட்டது. நாம் இலங்கை மக்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப் படுகின்றோம். இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களான சீக்கியரும், அமெரிக்காவில் சிறுபான் மை இனத்தவர்களான கறுப்பு இனத்தவர்களும் ஜனாதிபதியாக ஆகலாம். ஆனால் இலங்கையில் நம்மினத்தவர்கள் ஜனாதிபதி ஆக முடியாது. 1960ம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அங்கு இன்று ஆறு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டு எமது கோரிக்கைக்கு உங்களது நாடுகளின் ஆதரவினைப் பெற வேண்டும். வடக்கு, கிழக்கு எமது பூர்வீக பூமி. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரான எம்மிடையே பிளவு எதுவுமே இல்லை. நாம் உறுதியாக உள்ளோம்”.

தமிழ் மக்களுக்கு பண்பாடு மிக முக்கியம். தமிழினம் தனது பூர்வீகத்தைப் பாதுகாத்துக் கொள்ள பண்பாடு பாதுகாக்கப் படவேண்டும். அதனை பண்பாட்டு இயக்கம் புலம்பெயர்ந்த நாடுகளில் செய்து வருகின் றது என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

 

 

 
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:50:46 [Canada]
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்

Read More >

Jun 17 2013 09:38:10 [Canada]
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >

Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்

Read More >

Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்

Read More >

Jun 16 2013 10:15:59 [Canada]
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே

Read More >

Jun 15 2013 20:32:09 [Canada]
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

Read More >