கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம்:

ekuruvi-aiya8-X3

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறியோர் – முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின் பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு பகுதி தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவ்வருடத்தின் கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம் ஈழத்தமிழ் உறவுகளின் தொழில் சார் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.

காலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர் துடைக்க ஒன்றிணைந்து பயணிப்போம் வாரீர்!

இடம்: John Daniels Park (Markham Rd & Steels Avenue)

காலம்: செப்டெம்பெர் மாதம் 23 ஆம் நாள் 2017 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416.830.7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

Share This Post

Post Comment