உலகின் மிக காரமான மிளகாயை தின்றவருக்கு ஏற்பட்ட கதி

ekuruvi-aiya8-X3

Worlds-hottest-chili-pepperஉலகின் மிகவும் காரமான கரோலினா ரீப்பர் (Carolina Reaper) என்ற மிளகாயில் ஒன்றை மட்டும் தின்ற 34 வயதான அந்த நபருக்கு தலை மற்றும் கழுத்து வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  குறித்த மிளாகாய் தின்ற நபர் ஒருவருக்கு இதுபோன்ற தலை மற்றும் கழுத்து வலி ஏற்படுவது இதுவே முதன் முறை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த சில நாட்களில் தொடர்ந்தும் விட்டு விட்டும் அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையிலும், மிகவும் ஆபத்தான கட்டத்திலும் அவர் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Share This Post

Post Comment