கணவரை பாம்பு கடித்தது; ஒன்றாக சாக விரும்பி மனைவியை கடித்தார் கணவர்

Thermo-Care-Heating

snake_14பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பிர்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய். அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு விஷப்பாம்பு கடித்து விட்டது. திடுக்கிட்டு எழுந்த அவர், தன்னை விஷப்பாம்பு கடித்ததையும், தன்னால் உயிர் பிழைக்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார். தன் மனைவி அமிரி தேவி மீது உயிரையே வைத்திருந்த அவர், மரணத்திலும் மனைவியை விட்டு பிரியக்கூடாது என்று முடிவு எடுத்தார்.

அதனால், மனைவியிடம் சென்று விஷயத்தை சொல்லிவிட்டு, ‘உன்னை பெரிதும் நேசிக்கிறேன். உன்னுடன் சேர்ந்து சாக விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மனைவியின் கை மணிக்கட்டை, விஷம் ஏறிய தனது பல்லால் கடித்தார். மனைவியும் அதற்கு மகிழ்ச்சியுடன் உடன்பட்டார்.

அடுத்த சில நிமிடங்களில், இருவரும் மயங்கி விழுந்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள், இருவரையும் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சங்கர் ராய் உயிரிழந்தார். அவருடைய மனைவி அமிரி தேவியின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். அவர் நலமுடன் இருப்பதாக அவர்கள் கூறினர்.

இதனால், மனைவியுடன் சேர்ந்து சாக வேண்டும் என்ற கணவரின் இறுதி ஆசை நிராசை ஆனதுதான் பரிதாபம்.

ideal-image

Share This Post

Post Comment