எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்

dog_shootஅமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி (51). இவர் லாப்ராடார் இனத்தைச் சேர்ந்த பாலே என்ற நாயை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.
சம்பவத்தன்று ரிச்சர்ட் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சோபாவில் அமர்ந்திருந்த ரிச்சர்ட்டின் மடி மீது பாலே ஏறிக் குதித்து விளையாடியுள்ளது. இதில், அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 எம்.எம். ரக துப்பாக்கி வெளியே விழுந்துள்ளது.
விளையாட்டாக அந்தத் துப்பாக்கியை எடுத்தது பாலே. அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, ரிச்சர்ட்டின் உடலில் குண்டு பாய்ந்தது.
உடனடியாக அவர் அவசர உதவி மையத்தின் எண்ணான 911க்கு கால் செய்தார். அதில் பேசிய நபரிடம், ‘தன்னை நாய் சுட்டு விட்டது. காப்பாற்றுங்கள்’ என ரிச்சர்ட் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி, பின்னர் ரிச்சர்ட்டை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.
அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறும் அமெரிக்காவில், வளர்ப்பு நாயால் எஜமானி சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





Related News

  • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
  • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
  • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *