வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு

11_feet_keraiநாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய செடிகளையும், மூலிகைகளையும் வளர்த்து வருகிறார்.

மேலும் இப்பயிர்களுக்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் தொழு உரம், சாணக்கரைசல் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வழக்கமாக 6 மாதத்தில் 4 அடி உயரமே வளரும் செங்கீரை தண்டு எனும் கீரைத் தண்டை வளர்த்துள்ளார்.

இந்த செங்கீரைத் தண்டானது அபரிமிதமான வளர்ச்சியை கண்டு 11 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த அபூர்வ கீரைத்தண்டை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.






Related News

  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • “பிஸ் ஆன் மி” நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை
  • வீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு
  • 20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்
  • டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *