இந்தியாவின் பராம்பரிய சின்னங்கள் தனியார் வசமாகுமா?

ekuruvi-aiya8-X3

parambariyamநாட்டில் உள்ள அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க, மத்திய சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாரம்பரிய சின்னங்களை, தனியார் நிறுவனங்கள் தத்து எடுக்கும் திட்டத்தை, மத்திய சுற்றுலா அமைச்சகம் துவங்கியது. அதன்படி, நாடு முழுவதும், 93 பாரம்பரிய சின்னங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்பை, தனியார் நிறுவனங்கள் ஏற்பது குறித்த அறிவிப்பு, அமைச்சக இணையதளத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், டில்லியில் உள்ள செங்கோட்டை, டால்மியா குழுமத்திடமும், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஜி.எம்.ஆர்., மற்றும் ஐ.டி.சி., குழுமத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.தற்போது, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள, பீம்பட்கா, குவாலியர் கோட்டை, ததியா மஹால், ராணி ரூப்மதி பெவிலியன், ஹோஷங்ஷா கல்லறை உள்ளிட்ட ஏழு பாரம்பரிய சின்னங்களை பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, படிப்படியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, தொல்லியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment