15வது மாடியில் இருந்து குழந்தைகளை கீழே வீசிக் கொன்ற தாய்

ekuruvi-aiya8-X3

15_buildingமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியை சேர்ந்தவர் ஷிரின் ஹனிப் கான்(27). 2 குழந்தைகளின் தாயான இவர் இன்று காலை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடமொன்றிற்கு சென்றார். தனது 2 குழந்தைகளுடன் அக்கட்டிடத்தின் 15-வது மாடிக்கு சென்ற ஷிரின் குழந்தைகள் இருவரையும் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசிக் கொன்றார்.

தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஷிரின் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தானே போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

15-வது மாடியில் இருந்து பெற்ற தாயே குழந்தைகளைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment