விக்னேஸ்வரனைச் சந்தித்தார் ரொட் புச்வால்ட்

ekuruvi-aiya8-X3

Todd-Buchwald-met-wigneswaran-2சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இச்சந்திப்பானது கொழும்பிலுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவே இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீர் பயணமொன்றை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வாலட் இலங்கை வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலர் மற்றும் வடக்கு ஆளுநர் ஆகியோரையும் சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Todd-Buchwald-met-wigneswaran-1

Share This Post

Post Comment