சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது யார்?

Facebook Cover V02

sekar_Reddy_1”தமிழகத்திற்கு, சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான்,” என, அ.தி.மு.க., பன்னீர் அணியின், ஊடக ஒருங்கிணைப்பாளர், அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ‘சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு, பன்னீர்செல்வம் தான் அறிமுகப்படுத்தினார்’ என, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்; அது, தவறானது. சேகர் ரெட்டியும், அமைச்சர் விஜயபாஸ்கரும், கல்லுாரி காலத்தில் இருந்தே, நெருங்கிய நண்பர்கள். அவர் தான், சேகர் ரெட்டியை தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார்.

‘தற்போது ஊழல் ஆட்சி நடைபெறுகிறது’ என, பன்னீர் செல்வம் கூறியதில், தவறு எதுவும் இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்; தற்போது அவரது சொத்துகளை முடக்கி உள்ளனர்; அவர் மீது, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் காமராஜ் மீது, மோசடி வழக்கு பதிவு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அவரும் பதவியில் தொடர்கிறார். குட்கா விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான, டி.ஜி.பி.,க்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஊழல் ஆட்சி என, அனைவரும் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment