ப்ளூர் ஸ்ட்ரீட்டில் பட்டப்பகலில் துணிகரக் கொள்ளை – பெண்மணிக்கு போலிஸ் வலைவீச்சு !!

ekuruvi-aiya8-X3

டொரோண்டோ நகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் பெண்மணி ஒருவர் மற்றொரு பெண்ணை தாக்கிவிட்டு அவரிடமிருந்தவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது. மேற்கு ப்ளூர் தெருவில் அதாவது ஸ்படினாவிற்கு மேற்கே கடந்த வாரம் பிற்பகல் நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் இன்னொரு பெண்மணியால் தாக்கப்பட்டார்.

தாக்கிய அந்தப் பெண்மணி இவரிடமிருந்த கைப்பை , பணப்பை, ஐ போன் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையடித்தும் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது மீண்டும் சம்பந்தப்பட்ட பெண்ணை தாக்கியுள்ளார் கொள்ளை சம்பவத்தில் இறங்கிய பெண்மணி.

இது தொடர்பில் விசாரணை நடத்திய டொரோண்டோ காவல்துறை அதிகாரிகள் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 25 வயது பெண்ணின் படங்களை வெளியிட்டுள்ளனர். பிரவுன் முடியுடன் குதிரைவால் போட்டிருந்த இந்தப் பெண்மணி 5.7 அங்குல உயரத்துடன் காணப்படுவார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தோர் 416-808-1400 ,  (8477) ஆகிய எண்களில் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்cvbdgbdg

Share This Post

Post Comment