
விடுமுறைக்காலத்தை கழிப்பதற்காக ஒன்டாரியோவின் டிம்மின்ஸ் பகுதியிலிருந்து மெச்சிகோ சென்ற பாடசாலை ஆசிரியர்கள் இருவர் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள விடயம் அந்தப் பாடசாலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வடக்கு ஒன்டாரியோவின் டிம்மின்ஸ் பகுதியில் அமைந்துள்ளது டிம்மின்ஸ் ஒன்டாரியோ உயர் பாடசாலை.
இதில் மாணவர்களுக்கான சேவைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர் 54 வயதாகும் Sue Drummond. இதே பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் 65 வயதாகும் ஸ்டீவ் எல்லி. இருவரும் கணவன் மனைவி,
விடுமுறைக்காக மெக்சிகோ சென்ற இருவரும் Cancun நகரிலிருந்து 130 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள ரேசொர்ட் ஒன்றில் தங்கியிருந்தனர். கடற்கரைப் பகுதி விடுதியில் தங்கியிருந்த இவர்கள் கடலுக்கு குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இந்த செய்தியை பாடசாலையில் பயிலும் மாணவர்களிடமும், உடன் பணியாற்றிய ஊழியர்களிடமும் ஒன்டாரியோ வடகிழக்கு மாவட்ட பாடசாலைக் கழகத்தின் துணைத் தலைவர் Bob Brush இன்று அறிவித்தார்.
உயிரிழந்த தம்பதிகளின் சடலங்களை கனடா கொண்டு வர முயர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.