வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இஸ்லாமியப்பெண்!

ekuruvi-aiya8-X3

Rumana-Ahmed-640x360அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த, தேசிய பாதுகாப்பு சபை பணியாளரான ருமானா அகமது என்ற இஸ்லாமியப்பெண் டிரம்பின் பயணத்தடை அறிவித்த 8 நாட்களில் பணியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன், தனது நிர்வாகத்தில் அவர் பல்வேறு மாற்றங்ககளை செய்தார். அத்தோடு தேசிய பாதுகாப்பு சபைக்கு புதிய தலைவர் மற்றும் பணியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பங்களாதேஷ் வம்சாவளியை சேர்ந்த ருமானா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசாங்கத்தின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் புதிய ஜனாதிபதியாக டொனால்டட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, ஈராக், ஈரான் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடையை ஏற்படுத்தியதன் மூலம் பயணத்தடையை விதித்தார். குறித்த திட்டம் அறிவிக்கப்பட்ட 8 தினங்களில் ருமானா அகமது தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

குறித்த பணி விலகலானது வெள்ளை மாளிகையில் உணர்ந்த பாரபட்சம், மற்றும் இன ரீதியாக தாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தமையினாலேயே ஏற்படுத்தப்பட்டதாக ருமானா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

FD679B8F-C0E8-4B42-B2CC-451583B090AA_L_styvpf

Share This Post

Post Comment