கல்யாணத்தை நிறுத்திய வாட்ஸ்ஆப் வெறி

ekuruvi-aiya8-X3

whatsapp

உ.பி., மாநிலத்தில் மணப்பெண் எப்போது பார்த்தாலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டி கல்யாணத்தை நிறுத்தி விட்டனர்.

உ.பி., மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நவ்கான் சதாத் கிராமத்தை சேர்ந்தவர் உரோஜ் மெஹந்தி. இவர் தன் மகளுக்கும் பக்கீர்புரா கிராமத்தை சேர்ந்த குவாமர் ஹைதர் என்பவர் மகனுக்கும், திருமணம் நிச்சயம் செய்தார். செப்., 5ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அன்றைய தினம் மெஹந்தி வீட்டில் உறவினர்கள் குவிந்து விட்டனர்.

மாப்பிள்ளை வீட்டாருக்காக அனைவரும் காத்து இருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. இது குறித்து மெஹந்தி போனில் கேட்ட போது, ‘ மணப்பெண் எப்போது பார்த்தாலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார். திருமணம் நடப்பதற்கு முன்பே, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த பெண் உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கிறார். எனவே, எங்களுக்கு அந்த பெண் வேண்டாம்’ என, கூறி விட்டனர்.

இதனால் கோபம் அடைந்த மெஹந்தி போலீசில் புகார் செய்தார். புகாரில், ‘ மாப்பிள்ளை வீட்டார், 65 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். கொடுக்கவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்தி விட்டனர்’ என, கூறியுள்ளார். இப்பிரச்னை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share This Post

Post Comment