என்ன செய்ய போகிறார் கர்நாடக கவர்னர்?

karnataka_governorகர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரை சந்தித்து, பா.ஜ.,வின் எடியூரப்பா கடிதம் அளித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்க மீண்டும் கவர்னரை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நேரம் கேட்டுள்ளார். இதுவரை கவர்னர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

மாலை 6 மணிக்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ள குமாரசாமி, கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மஜத மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் கையெழுத்து பெற்று வருகிறார். கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஆஜர்படுத்த காங்., மற்றும் மஜத திட்டமிட்டுள்ளன.

ஒருவேளை கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் எம்எல்ஏ.,க்களை அழைத்துச் சென்று தர்ணா போராட்டம் நடத்தவும் காங் மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் காங்., ஆலோசனை நடத்தி வருகிறது.






Related News

  • கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம் – நிலைகுலைந்த மின்சார சேவை
  • நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு – இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி தீவிரம்
  • தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
  • சந்திராயன் – 2 செயற்கைக்கோளை ஜனவரியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்
  • மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பிற்கு பயப்பட வேண்டும் – அருண் ஜெட்லி
  • இரட்டை இலை சின்ன விவகாரம்; தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
  • ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு
  • கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *