மக்களிடம் அமைதியாக பேச போலீசாருக்கு ராஜ்நாத் உத்தரவு

புகார் அளிக்க, போலீஸ் ஸ்டேசன் வரும் பொது மக்களிடம் போலீசார் அமைதியாக பேச வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டில்லி போலீசாருக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: போலீசாரிடம் புகார் அளிக்க யாராவது வந்தால், அவர்களிடம் நம்மால் அமைதியாக பேச முடியாதா? நீண்ட நேரம் காத்திருந்தால், அவர்களுக்கு நம்மால் தண்ணீர் வழங்க முடியாதா? பொது மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த போலீசார் கவனம் செலுத்த வேண்டும்.

வாய்ப்பிருந்தால், போலீஸ் ஸ்டேசன்களில், புகார் அளிக்க வருபவர்களுக்கு வசதியாக தேநீர் கடைகள் ஏற்படுத்த போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவருக்கும் முன்மாதிரியாக போலீசார் ஏன் திகழக்கூடாது. போலீஸ் ஸ்டேசன்கள் மற்றும் போலீசார் குறித்து பொது மக்கள் அனுப்பும் கருத்துகள் கவலை அளிப்பவையாக உள்ளன. உதவிக்காக போலீஸ் ஸ்டேசன் வருபவர்களை நடத்தும் விதத்தை மாற்ற வேண்டும். அவர்களை கவுரவத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

நிகழ்ச்சியில், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் கலந்து கொண்டனர்.






Related News

  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *