ஓட்டுநர் முஸ்லிம் என்பதால் ஓலாவை கேன்சல் செய்த விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவருக்கு ஓலா பதிலடி

Facebook Cover V02
olA_23அபிஷேக் மிஸ்ரா என்பவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஓட்டுநர் முஸ்லீம் என்பதால் ஓலாகேப்பை ரத்து செய்துவிட்டேன். நான் எனது பணத்தை ஜிகாதி மக்களுக்கு தரமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இது சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘நான் மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற அணிக்கான விருதை பெற்றவர்.
அபிஷேக் மிஸ்ராவின் டுவீட்டிற்கு பதிலளித்துள்ள, ஓலா நிறுவனம் நமது நாடு மதசார்பற்றது எனவும் ஓலா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள், பங்கீட்டாளர்கள், ஓட்டுனர்களின் ஜாதி, மதத்தை பாகுபாடு படுத்தி பார்ப்பதில்லை எனவும் ஓலா நிறுவனம் எல்லா ஓட்டுநர்களிடம் எல்லோரையும் சமமாக பாருங்கள் எனவும் அறிவுறித்துள்ளதாக அபிஷேக் மிஸ்ராவிற்கு பதிலடி அளித்துள்ளது.

Share This Post

Post Comment