லண்டனில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல் நடத்த முயற்சி

ekuruvi-aiya8-X3

nawaz-attackபனாமா கேட்’ ஊழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கினர். இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு,  நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் , அவரது மகள் மரியாம் குறைந்தது ஏழு ஆண்டுகள் மற்றும் மருமகன் சப்தர்க்கு ஒரு வருடம் சிறைதண்டனையும் விதித்து உள்ளது.
இந்த நிலையில்  லண்டனில் உள்ள நாவாஸ் ஷெரீபை அங்கு ஒரு கும்பல் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர்  அன்ஃபீல்ட் ஹவுஸில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்த வீடியோ காட்சி பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அதில்  லண்டனில்  ஒரு  இளைஞர்கள் கூட்டம் மிகவும்  ஆக்ரோஷமாக அவரது வீட்டிற்குள் நுழைய முயன்று உள்ளனர். நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் அவரை தாக்க முயன்று உள்ளனர். அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி உள்ளனர் அதனை அவரது பாதுகாவலர்கள் தடுத்து உள்ளனர். இது குறித்து உள்ளூர் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்த போதிலும், ஷெரீப் குடும்பத்தினர் எந்த புகாரும் கொடுக்கவில்லை இதனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து கூறிய நவாஸ் ஷெரீப் மகள்  மரியாம் நவாஸ் கூறும் போது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிதான் என குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இங்கிலாந்தின்  தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் இதனை மறுத்து உள்ளனர்.

Share This Post

Post Comment