இந்திய கடற்படையில் பணியாற்றிய 2 போர்க்கப்பல்களுக்கு ஓய்வு

ekuruvi-aiya8-X3

Warships-இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். நிர்பிக் மற்றும் ஐ.என்.எஸ். நிர்கத் இரண்டு போர்க்கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டார்.

மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் இரண்டு போர்க்கப்பல்களும் ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஐ.என்.எஸ். நிர்கத்தின் முன்னாள் கமாண்டர் ஆர்.பி. பண்டித் தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும் இந்த கப்பல்களின் முன்னாள் கமாண்டர்கள் வி.ஆர்.நாப்டே மற்றும் எஸ். மம்புள்ளி ஆகியோர் சிறப்பி விருந்தினாரக பங்கேற்றனர்.

ஐ.என்.எஸ். நிர்கத் மற்றும் ஐ.என்.எஸ். நிர்பிக் முறையே 30 மற்றும் 28 ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெறுகின்றன. இரண்டு கப்பல்களும் பல போரில் பங்கேற்று உள்ளன. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரின் போது கராச்சி துறைமுக தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளன.

Share This Post

Post Comment