விவோ நிறுவனத்தினன் வி79 ஸ்மார்ட்போன் வெளியானது

ekuruvi-aiya8-X3

Vivo-Y79Fவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வி79 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய விவோ வி79 ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவோ வி79 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல், 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3225 எம்ஏஎச் பேட்டரி

ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் விவோ வி79 ஸ்மார்ட்போன் 2498 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,470 விலையில் சீனாவில் கிடைக்கிறது. முன்னதாக விவோ நிறுவனத்தின் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிட்டது.

Share This Post

Post Comment