பஸ் விபத்து: 9 பேர் வைத்தியசாலையில்

Facebook Cover V02

accidentதிருகோணமலை – கொழும்பு பிரதான வீதியின் அக்போபுர பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், வௌிநாட்டவர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், காயமடைந்த சாரதி மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்ட ஒன்பது பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment