மோடி குறித்து நேரடி விவாதத்திற்கு தயாரா?: கன்ஹையா குமாருக்கு 15வயது மாணவி சவால்

Thermo-Care-Heating

behal-450x257லூதியானவைச் சேர்ந்த ஜான்வி பெஹல் (Jhanvi Behal) எனும் 15 வயது சிறுமி பிரதமர் மோடி குறித்து ஜே.என்.யூ மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேருக்கு நேர் பகிரங்கமாக விவாதிக்க தயாரா என அவருக்கு சவால் விடுத்துள்ளார்.

பஞ்சாம் மாநிலம் லூதியானாவை சேர்ந்த 15 வயது மாணவி ஜான்வி, தூய்மை இந்தியா திட்டத்தில் அளப்பரிய பங்களிப்பை அளித்ததற்காக சமீபத்தில் குடியரசு தினம் அன்று கவுரவிக்கப்பட்டவர் ஆவார்.

தேச விரோத வழக்கில், சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்ததும் கன்ஹையா குமார் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில்
கன்ஹையா குமார் கூறிய குற்றச்சாட்டுகள் வரவேற்கத்தக்கவை அல்ல என்றும், பிரதமர் மோடி நாட்டிற்காக கடினமாக உழைப்பவர், அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதை விடுத்து அவரை போல கடினமாக உழைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவருக்கு மாணவி ஜான்வி வலியுறுத்தியுள்ளார்.

மாணவி ஜான்வி அவரின் சமூகப் பணிகளுக்காக நாடு முழுவதும் அறியப்பட்டவர் ஆவார், இவர் சமீபத்தில் சமூக இணையங்களிலிருந்து ஆபாசப் படங்களை நீக்குவது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார், மேலும் 18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மது மற்றும் புகையிலையை விற்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்ய வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment