விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

Tamil_News_large_175088020170413104336_318_219விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர்கள் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் மாணவர்கள் சிலர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடரும் விவசாயிகள் தற்கொலை, தீர்க்கப்படாமல் இருக்கும் விவசாயிகள் பிரச்னை, காவிரி ஹை ட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும், மேலாண் வாரியம் அமைத்தல்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

திரைப்பட இயக்குனர் கௌதமன் தலைமையில் கத்திப்பாரா மேம்பாலத்தின் குறுக்கே இரும்பு சங்கிலியில் பூட்டு போட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் போராட்டத்தால் இங்கு பெரும் அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment