விற்பனைக்கு வரும் கேலக்ஸி நோட் 8?

ekuruvi-aiya8-X3

Samsung-Galaxy-Note-8சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிர்த்தியேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் அமேசான் தளத்தில் நோட் 8 அறிமுக நிகழ்விற்கான விளம்பரங்களை பதிவு செய்துள்ளன.

அமேசானில் கேலக்ஸி அன்பேக்டு என்ற விளம்பரத்தை கிளிக் செய்ததும் விழா நேரலை செய்யப்பட இருக்கும் இணையத்தளம் திறக்கிறது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி நோட் 8 அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்டது. இத்துடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் அந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதுவரை வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் பிக்ஸ்பி வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்படும் என்றும் வழக்கமான டீப் சீ ப்ளூ நிறத்தில் வெளியிடப்படாது என கூறப்பட்டது.

இத்துடன் 6.3 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்மார்ட் எஸ் பென், ஐரிஸ் ஸ்கேனர், டூயல் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதிகள் கொண்டிருக்கும் என்ரும் சாம்சங்கின் ஸ்மார்ட் ஸ்விட்ச் ஆப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த செயலி பழைய சாதனங்களில் இருக்கும் தகவல்களை எளிமையாக பரிமாறிக்கொள்ள வழி செய்யும்.

Share This Post

Post Comment