வித்தியா படுகொலை விசாரணை அதிகாரிகளுக்கு 13 இலட்சம் பணப்பரிசு!

ekuruvi-aiya8-X3

vidyaபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு 13 இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிகிழமை சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலையே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டது.

குறித்த கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி காவல்துறை அத்தியட்சகர் பீ.ஏ. திசரா, பிரதான விசாரணை அதிகாரி காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கும் 13 இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் பாடசாலை சென்ற புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 9பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவ்வருடம் ட்ரயல் அட் பார் முறையில் மூன்று தமிழ் நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் 7பேருக்கு மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment