விதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும்

ekuruvi-aiya8-X3

Vidarbhaவிதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும். அதேபோல் உ.பி.யில் இருந்து மேலும் இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அதவாலே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய பகுதியாக விதர்பா மண்டலம் விளங்கி வருகிறது. விவசாயிகளை அதிக அளவில் கொண்ட மண்டலமாக விளங்கும் விதர்பாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவரும் ஆன ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதுகுறித்து ராம்தாஸ் அதவாலே கூறுகையில், ‘‘தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றபோது நாங்கள் அதற்கு ஆதரவு அளித்தோம். விதர்பா மண்டலம் உடனடியாக தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சி மற்றும் மக்கள் தனி மாநிலம் வேண்டும என்று வற்புறுத்து வருகிறோம். விதர்பா மண்டலத்தில் தொழிற்சாலைகள், பாசன வசதிகள் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை.

நாங்கள் விதர்பா மாநிலத்தை விரும்புகிறோம். இந்தி பேசும் மாநிலம் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மகாராஷ்டிராவை ஏன் பிரிக்கக்கூடாது?.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் விதர்பா பகுதியில் இருந்து வந்தவர்கள். நாங்களும் விதர்பா மாநிலத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.

அதைபோல் உ.பி.யில் இருந்து இரண்டு மாநிலங்கள் புதிதாக பிரிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Share This Post

Post Comment