வெளியில் இருந்து ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன்: விஷால் ஆவேசம்

ekuruvi-aiya8-X3

Vishal12அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் அணிகள் இடையே மோதல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்; விஷாலின் திடீர் தேர்தல் பிரவேசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுயேட்சையாக அவர் போட்டியிட்டாலும், யாருக்கு சவாலாக இருப்பார் என்ற கோணத்தில் எதிர்பார்ப்பு எழுந்தது.
விஷால் தாக்கல் செய்த வேட்புமனு முடிவில் ஏற்கப்படவில்லை. தேர்தல் அதிகாரியிடம் விஷால் பேசிய பிறகு மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டதாக இரவில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை விஷால் சந்தித்தார். அப்போது தனது வேட்புமனுவை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து விஷாலின் வேட்பு மனு மறு பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி பட்டியலில் விஷாலின் பெயர் இடம் பெறவில்லை.
இதுதொடர்பாக விஷால் கூறும்போது, ‘இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் என் பெயர் இடம் பெறவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும், ஆர்.கே.நகர் மக்களுக்கு வெளியில் இருந்து நல்லது செய்வேன்’ என்று ஆவேசமாக கூறினார்.

Share This Post

Post Comment