நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது!

Thermo-Care-Heating

vishalதமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நேற்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், வேட்புமனு நிராகரிப்பு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சரியான முடிவை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டுள்ளது. நல்லது நடப்பதற்கு தடைகள் இருக்கும்.

நிறைய சுயேச்சை வேட்பாளர்கள் எனக்குத் துணையாக நின்றார்கள்.
அவர்களுடைய பெயர்கூட எனக்குத் தெரியாது. எனக்கு எதிராக யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திக்கவுள்ளேன். நாளை முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment