விஷ ஊசி: முதலில் தமிழ் மருத்துவர்களிடம் காண்பியுங்கள், வட மாகாண சபைக்கு அமைச்சர் ஆலோசணை

ekuruvi-aiya8-X3

Operation-Pacific-Angel-jaffna-6-450x210-1-450x210விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க மருத்துவர்களின் சேவையைப் பெறுவது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் யோசனையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மருத்துவ நடமாடும் சேவையை வழங்கும் பொருட்டு அமெரிக்க மருத்துவக் குழாம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருக்கும் நிலையில் விஷ ஊசி விடயத்தில் முன்னாள் போராளிகளை அவர்களிடம் பரிசோதனை செய்வதற்கான யோசனைக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வடமாகாண சபை அமர்வின்போது விருப்பம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளூர் மருத்துவர்களால் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்ய முடியாத பட்சத்திலேயே வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களது உதவிகள் கோரப்படும் என்று தெரிவித்ததோடு அவ்வாறான சந்தர்ப்பம் இன்னும் உருவாகவில்ல எனவும் கூறினார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களிடையே 80 சதவீதமானவர்கள் தமிழ் மருத்துவர்களே ஆகும். சம்பந்தப்பட்ட வடமாகாண அமைச்சருக்கு இதுகுறித்து ஆராய்ந்து, என்னிடம் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கேட்டிருந்தேன்.

வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஒரு வைத்தியர். மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விக்னேஸ்வரனை விடவும் அமைச்சர் சத்தியலிங்கத்திற்குத் தெரியும். அமெரிக்க மருத்துவர்களுக்கு வழங்குவதை விடவும் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியுமா என்பதை சந்தர்ப்பம் வழங்கிதானே பார்க்க வேண்டும்.

கண்டறிய முடியாத பட்சத்தில் தானே அமெரிக்காவின் உதவி நாடவேண்டும். வைத்தியசாலையில் உள்ளூர் மருத்துவர்கள் இருக்கின்ற நிலையில் நடமாடும் சேவையை வழங்க வந்த மருத்துவர்களை ஏன் அழைக்க வேண்டும்?அப்படியொரு முறையும் இல்லை. எமக்கு முடியாத பட்சத்திலேயே மற்றவர்களுடைய உதவி நாடப்படும்”)

இவ்வாறு செய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, (“இந்த நோயைக் கண்டுபிடிக்க அரசாங்கத்தினால் முடியாத வேளையில் வெளிநாட்டிலிருந்து நிபுணர்களை அழைத்து வருவதற்கு முடியும். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போது ஏற்படவில்லை”)

Share This Post

Post Comment