ஜிஎல் பீரிஸ் இன்று விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார்

Facebook Cover V02

G.L pirishகடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி உட்பட ஒரு தொகுதி வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் வெள்ளவத்தைக்குக் கொண்டுவர இருந்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் விசாரணை நடாத்தப்படவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஜிஎல்.பீரிஸ் தெரிந்து வைத்திருக்கிறார் ஆகவே அவரிடம் விசாரணை நடாத்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி அவர்கள் பீரிஸிடம் விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே இன்று முற்பகல் 10.00மணியளவில் ஜி.எல்.பீரிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் சாவக்சசேரி சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு ஆதாரம் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment