விசாரணைக் குழுவின் அறிக்கைக்கெதிராக நீதிமன்றம் செல்லவுள்ளேன் – ஐங்கரநேசன்!

Thermo-Care-Heating

inkaranesanஅண்மையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினரின் விசாரணை அறிக்கைக்கெதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் இன்று திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர்மீ நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சத்திற்கெதிரான தனது தீவிரமான நடவடிக்கையினாலேயே முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அவரது அறிக்கையானது ஊழல், மோசடி மற்றும் இலஞ்சத்திற்கெதிரானது அல்லவெனவும், அவரது இந்நடவடிக்கையானது முதலமைச்சரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விசாரணைக்குழுவானது ஏதோவொன்றுக்கு சோரம்போன விசாரணைக் குழுவென்றும் அவர் குற்றம் சாட்டத் தவறவில்லை.

ideal-image

Share This Post

Post Comment