கீதா குமாரசிங்கவின் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை

ekuruvi-aiya8-X3

geeth_kumarasingheசினிமா நடிகை கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்து கடந்த 03 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

உயர் நீதிமன்றத்தில் தான் செய்துள்ள மனுவின் தீர்ப்பை அறிவிக்கும் வரையில், தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை செயற்படுத்தாது இடைநிறுத்தி வைப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மனுவில் அவர் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இருப்பினும், இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment