பெற்றோர், தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்து வர விரும்புவோருக்கு நல்ல காலம் பொறந்திருச்சு !!

ekuruvi-aiya8-X3

கனடிய மக்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளை நாட்டிற்குள் அழைத்து வர வசதியாக இதற்கான விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக லிபரல் அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதங்களுக்குப் பின்னர் கேள்வி நேரத்தின் போது கடந்த இரண்டு வருடங்களாக இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5000 ஆக இருந்ததாகவும் இனி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10000 என உயர்த்தப்படுவதாகவும் குடிவரவுத்துறை அமைச்சர் ஜான் மெக்கல்லம் தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைகளின் போது பெற்றோர்களை அழைத்து வருவதற்கான விசா அனுமதி எண்ணிக்கையில் லிபரல் அரசு மாற்றம் கொண்டு வரும் என்ற உறுதிமொழியினையும் ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கான விசா திட்டம் என்பது கனடாவைப் பொறுத்த வரையிலும் மிகவும் பிரபலமான குடிவரவு நடைமுறைகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது. கடந்த 2011 இல் கன்செர்வேடிவ் ஆட்சியின் போது இந்த விசா திட்டத்தில் கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு இதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. ஏற்கனவே குடிவரவுத்துறையில் தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதாக கன்செர்வேடிவ் அரசு தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும் கூட கனடிய மக்களின் மத்தியில் அரசின் இந்தச் செயல்பாடு அதிருப்தியையே உண்டாகி இருந்ததுjhonemc

Share This Post

Post Comment