பிலிம்பேர் விருதுகள் 2017: விருது பெற்றவர்கள்!

Thermo-Care-Heating

filmfare-award-winners-full-list2017-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்களின் முழு விவரங்கள் உள்ளே உள்ளது.இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு 64-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் விருதுபெற்ற சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியலை கீழே பார்ப்போம்.

சிறந்த படம் – ஜோக்கர்
சிறந்த நடிகர் – மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த இயக்குனர் – சுதா கே.பிரசாத் (இறுதிச்சுற்று)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை – தன்சிகா (கபாலி)
சிறந்த அறிமுக நடிகை – மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த அறிமுக நடிகர் – சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் – தாமரை (தள்ளிப்போகதே – அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பின்னணி பாடகர் – சுந்தரைய்யர் (ஜாஸ்மினு – ஜோக்கர்)
சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் (மாயநதி – கபாலி)
சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு (24)
சிறந்த நடிகர் (Critics) – சூர்யா (24)
சிறந்த நடிகை (Critics) – த்ரிஷா (கொடி)

ideal-image

Share This Post

Post Comment