யாழில்.வீதி விபத்துக்கள் குறித்து விழிப்பூட்டும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

ekuruvi-aiya8-X3

4-428x285நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கவனத்தில் கொண்டு மறுமலர்ச்சிக்கான சர்வ மத பேரவையும், யாழ்ப்பாண றோட்டறக்ட் கழகமும் இணைந்து விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்றினை இன்று (சனிக்கிழமை) மாலை 4.00 மணியளவில் யாழ்.நகர் மையப்பகுதியில் மேற்கொண்டனர்.

குறித்த செயற்திட்டமானது நாட்டில் தற்போது அதிகரித்து வரும் அதிகளவான விபத்துக்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ‘வாகனம் செலுத்தும்போது ஒவ்வொரு விநாடியும் உங்கள் அன்புக்குரியவர்களை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் வேண்டும் . அதிவேகம் ஆபத்தானது’ போன்ற வாசகங்கள் அடங்கிய ஸ்ரிக்கர்கள் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் முக்கிய பல இடங்களில் ஒட்டப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.

இதில் மறுமலர்ச்சிக்கான சர்வ மத பேரவையின் அங்கத்தவர்களும், யாழ்ப்பாண றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20170520_163228-720x450 11-428x285 20170520_172005-428x285

 

 

Share This Post

Post Comment