உ.பி.யில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

ekuruvi-aiya8-X3

killed-3-injured-after-a-collision-between-a-car-and-busஉத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து மிர்சாபூர் மாவட்டம் விந்தியாஞ்சல் தாம் நோக்கி இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. பர்தா பகுதியில் உள்ள பீரா ரஜேபூர் கிராமத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்த அனைவரும் பாலியா மாவட்டம் சுக்புரா பகுதியைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment