ஏ9 வீதி விபத்தில் பௌத்த பிக்குணி பலி!

Thermo-Care-Heating

defdefயாழ் – கண்டி வீதியான ஏ 9 வீதியில் திறப்பனை பிரதேசத்தில் அலிஸ்தான் வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பௌத்த பிக்குணி ஒருவர் கொல்லப்பட்டதுடன், பிக்கு உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திறப்பனை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை கீர்த்தி பண்டாராராமயவில் வாழ்ந்து வந்த 65 வயதனா பிக்குணியே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

வலப்பனையில் இருந்து அனுராதபுரத்திற்கு யாத்திரையாக வந்தவர்கள் பயணித்த வான் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகனத்தில் 11 பேர் பயணம் செய்துள்ளனர். படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment