விண்வெளியில் பட்மிட்டன் விளையாடும் விண்வெளி வீரர்கள்!

Thermo-Care-Heating

mi-1சர்வதேச விண்வெளியில் பட்மிட்டன் விளையாடும் விண்வெளி வீரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் நடப்பதே சிரமமான காரியம். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பட்மிண்டன் விளையாடி கலக்கியுள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து பறந்துகொண்டே விளையாடும் வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் :- விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம் மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment