விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டிய தனியார் நிறுவனம்!

ekuruvi-aiya8-X3

priஉலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டி வருகிறது.

அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் என்பவரின் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் தற்போது உலகிலேயே பெரிய ராக்கெட்டை. இன்று மதியம் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்டிற்கு ஃபல்கான் ஹெவி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும்.

18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும் 747 ஜெட் விமானங்களுக்கு இணையான வேகமும் இதில் இருக்கிறது. இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ராக்கெட் தற்போது எந்த முக்கியமான காரணத்திற்காகவும் அனுப்பப்படவில்லை.

இதில் தற்போது தேவையில்லாத பொருட்கள் சிலவற்றை மட்டும் வெறுமனே எடைக்காக வைக்கப்பட்டு அனுப்பப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் இருக்கிறது.

தற்போது நாசாவை விட சிறந்த நிறுவனமாக இந்த நிறுவனம் மாறியுள்ளது. அமெரிக்க விமானப்படையே இந்த ராக்கெட் குறித்து விளக்கம் கேட்டு சில உதவியும் கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment