41 ஆயிரம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

ekuruvi-aiya8-X3

rejected-உள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதில், தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் என, சுமார் 41 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில், குருணாகலை மாவட்டத்தில் இருந்து அதிகளவான – 67,411 – விண்ணப்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மிகக் குறைவான – 1,558 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment