3,500 ஆண்டுகளுக்கு முன் விண்கல்லிலிருந்து கிடைத்த இரும்பை பயன்படுத்திய எகிப்திய அரசர்

Thermo-Care-Heating

tutankamon_624x3513,500 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய எகிப்தை ஆண்ட டுடன்கமுன் என்னும் அரசர், சூரிய குடும்பத்தில் உள்ள பழம்பெரும் பொருட்களுள் ஒன்றான இரும்பு விண்கல்லால் ஆன கத்தியை பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மற்றும் எகிப்திய விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ரே ஆய்வைக் கொண்டு இந்த சிறார் அரசரின் கத்தியின் வெட்டுப் பகுதி பெரும்பாலும் இரும்பு, மற்றும் சிறிய அளவு நிக்கல், கோபால்ட் அகியவற்றால் ஆனவை என்றும் எனவே இந்தக் கலவை விண்கல்லிலிருந்து கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

பழங்கால எகிப்தியர்கள் இரும்புக் காலம் தோன்றுவதற்கு முன்னரே விண்கல்லிருந்து கிடைத்த இரும்பை வைத்து நகைகள் செய்ய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதரமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்டுப்பிடிப்பு விண்கற்கள் மற்றும் கோல்கள் தொடர்பான அறிவியல் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.

ideal-image

Share This Post

Post Comment