பூமியை மிக நெருக்கமாக கடக்கும் விண்கல் – நாசா அறிவிப்பு!

ekuruvi-aiya8-X3

Nasa_11மிகச்சிறிய விண்கல் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

15 முதல் 30 மீட்டர் அளவுள்ள அந்த விண்கல் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு பூமியை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து வெறும் 64 ஆயிரம் கிலோ மீட்டர் தூர இடைவெளியில் அந்த விண்கல் கடக்கும் என்றும், இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் நேரிடாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நிலவின் தொலைவை விட மிக நெருக்கமாக பூமியை கடப்பதால் விண்கல்லின் பயணத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விண்கல் பயணம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment