அலெப்போவில் விமானதாக்குதல்கள் மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

ekuruvi-aiya8-X3

allapo88சிரியாவின் முற்றுகைக்குள்ளாகியுள்ள அலெப்போ நகரில் பாடசாலைகள் புதிய கல்வியாண்டிற்காக ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள அதேவேளை விமானதாக்குதல்கள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றதாக அலெப்போ மக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஆசிரியர்கள் புதிய கல்வியாண்டிற்காக பாடசாலைக்கு வந்த மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறைந்தளவு மாணவர்கள் பாடசாலைக்கு வந்துள்ள போதிலும் அவர்களின் வருகை தங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அலெப்போ இரண்டாவது முற்றுகைக்கு உள்ளாகி 40 நாள்கள் ஆகின்ற நிலையில் சிறுவர்களை புத்தகப் பைகள், சீருடைகளுடன் பார்க்க முடிந்தது எனக்கு மிக்கமகிழ்ச்சியை அளித்துள்ளது என செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் பங்கர் பஸ்டர் குண்டுகள் போன்ற பதுங்கு குழிகளை கொண்டுள்ள பாடசாலைகளிற்கு கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள்’ அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Share This Post

Post Comment