”விமானத்தை கீழே விழச் செய்து விடுவதாக கடவுள் மிரட்டினார்”

phil_16367பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ, தன்னிடம் கடவுள் பேசியதாகவும் இனி தகாத வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மதத் தலைவர் போப்பை தகாத வார்த்தைகளில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் ரொட்ரிகோ .

ஜப்பான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய ரொட்ரிக்கோ, விமானத்தில் பயணிக்கும்போது, கடவுள் தன்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். ’தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்திகொள். இல்லையென்றால் விமானத்தைக் கீழே விழ செய்து விடுவேன்’ என கடவுள் மிரட்டியதாக செய்தி வெளியிட்டுள்ளார். கடவுளின் உத்தரவுபடி இனி தகாத வார்த்தை பேச மாட்டேன் என நாட்டு மக்களுக்கு வாக்களித்துள்ளார்.

Share This Post

Post Comment