சிறிலங்கா விமானப்படைக்கு 50 மில்லியன் ரூபா கடன் – நாமல்

Facebook Cover V02

namalஉள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்த வேண்டியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாரிய நிதிமோசடிகள், மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளிலேயே, நாமல் ராஜபக்ச செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரூபா விமானக்கட்டணங்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

முன்னைய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்காக விமானப்படை விமானங்களை அவர் வாடகைக்கு அமர்த்தியதற்கான கட்டணங்களே செலுத்தப்படாமல் உள்ளன.

சுமார் 150 உள்நாட்டுப் பயணங்களுக்கு நாமல் ராஜபக்ச விமானங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

Share This Post

Post Comment