கைமாறுகிறது மட்டக்களப்பு விமானநிலையம்!

Facebook Cover V02

maddakkalappuமட்டக்களப்பு விமானப்படை விமானத் தளம் மே 31 ஆம் திகதி முதல் சிவில் விமான அதிகார சபையின் கட்டுப்பாட்டில் வருகிறது. தனியார் வர்த்தக விமானங்கள் அன்றிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படும்.

இதுவரை காலமும் இராணுவக் கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம், இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார்.

சிவில் விமான அதிகார சபையினால் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நிலையம் அமைச்சரவை அங்கீகாரத்தின்படி 2016 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிவில் விமான அதிகார சபைக்கு கையளிக்கப்பட வேண்டும்.

இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட இலங்கை விமான நிலைய விமான சேவை நிறுவனம் மட்டக்களப்பு விமான நிலையத்தின் பராமரிப்பைப் பொறுப்பேற்கவுள்ளது.

Share This Post

Post Comment