உயிருள்ள அலங்கார விளக்கு!

ekuruvi-aiya8-X3

Tamil_News_large_1868591_318_219வீட்டுக்குள் இருக்கும் காற்றில் அதிக மாசுகள் இருக்கின்றன. மின்விசிறி போன்றவை உள்ளே இருக்கும் காற்றை சுழற்றுகிறதே தவிர சுத்திகரிப்பதில்லை. இந்த மாசுகளை நீக்க ஒரு புது வகை விளக்கை உருவாக்கியிருக்கிறார் லண்டனைச் சேர்ந்த பொறியாளர் ஜூலியன் மெல்சோரி.

கூரையில் தொங்கவிடப்படும் சாண்டிலியர் என்ற அலங்கார விளக்கின் வடிவத்தில் இருக்கும் இந்த, ‘உயிருள்ள’ விளக்கு, அறைக்குள் இருக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடுகிறது. தாவர இலை வேலை செய்யும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘பட்டு இலை’ ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டது.

இந்த இலை, கரியமில வாயுவையும் எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடும். ஜூலியன் தன் சாண்டிலியர் விளக்கில், 70 பட்டு இலைகளை பயன்படுத்தியிருக்கிறார். இந்த இலைகளுக்கு நீரும், இதர சத்துக்களும் சொட்டு நீர் பாசன முறையில் தரப்படுகிறது.

ஒவ்வொரு இலையிலும் கருநீலப் பாசிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சூரிய ஒளிக்கு பதிலாக, எல்.இ.டி., விளக்குகளின் வெளிச்சம் இந்த பாசிகளுக்குக் கிடைக்கும். எனவே, இந்த இயற்கை இலை, உயிருடன் வெகுநாட்களுக்கு வீட்டுக்குள் இருக்கும் மாசுகளை உறிஞ்சிக்கொள்ளும்.

Share This Post

Post Comment